அரசியல் சப்பாணி அண்ணாமலையின் ஆவேச சாக்கடைப் பேச்சு!
பதவிப் பித்தம் ஏறிப்போனதால் வார்த்தை வாந்தி
எடுத்துக் கொண்டிருக்கிறாய்..!
வடிகட்டிய யோக்கியன் போல எதிர்க்கட்சித் தலைவர்களை அசிங்கப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது...!
பாஜகவில் உள்ள
தலைவர்கள் எல்லாம்
புடம் போட்டத் தங்கம் போலவும் எதிர்க்கட்சியில்
இருப்பவர்கள் எல்லாம்
ஏமாந்த சோணகிரி போலவும் விமர்சனம் செய்து வருகிறாய்..!
இராணிப்பேட்டைக்கு வந்து
எங்கள்
மாவட்ட அமைச்சரையே அரசியலுக்குத் தகுதி
இல்லை என்று சொல்வதற்கு உனக்கு என்னத் தகுதி இருக்கிறது..?
கள்ளச்சாராய.... குண்டாஸ் என்று கூவிக்கூவி குரல் கொடுக்கிறாய்..!
நீ பாஜகவிற்கு அறிவித்த நிர்வாகிகள் எத்தனை பேர் கள்ளச்சாராய... குண்டாஸ் என்று ஊரும் உலகமும் அறியும்..!
கர்நாடகத்தின்
காவல்துறையில் பணிபுரிந்து
கல்லா கட்டிக்கொண்டிருந்து., பதவியைக் கை கழுவி விட்டு அரசியல் அதிகார மோகத்தால் ஆளுங்கட்சியில் சேர்ந்து கொண்டு..,
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பொறுப்பாளராக செயல்பட்டு
உன் தவளை வாயால்
கண்டபடி கூச்சலிட்டு
பாஜகவை தோற்கடித்துவிட்டு., தமிழகத்தில்
உனது பித்தலாட்டப் பேயாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறாய்..!
பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அவர்களை விமர்சனம் செய்வதற்கு
உன் கட்சியின்
மூத்தத் தலைவர்களுக்கேத் தகுதி இல்லாத போது
உனக்கு எப்படி
அந்தத் தகுதி வந்தது..?
நகரி திண்டிவனம்
புதிய ரயில் தடம் அமைக்க பணியைத் துவக்கி
ஏறக்குறைய
ஒன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன..,
வேலை பாதியிலேயே நிற்கிறது..!
இதைப் பற்றி
பாராளுமன்றத்தில்
ஜெகத்ரட்சகன்
பலமுறை கேள்வி எழுப்பியும்
அந்தத் திட்டத்திற்கான தொகை ஒதுக்கப்படவில்லை..!
உண்மையிலேயே
பொது மக்களின் மீது
அக்கறை கொண்டு
உனது நடைபயணத்தைத்
துவக்கி இருந்தால்..,
தடைப்பட்டுப் போன
இப்படிப்பட்டத் திட்டங்களை நேரடியாகப் பார்வையிட்டு அதைப்பற்றி
உன் தலைவனுக்கு
எடுத்துக் காட்டுவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டிருந்தால்
மக்கள் உன்னை
பாராட்டி இருப்பார்கள்..!
மதுரையில்
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக அடிக்கல் நாட்டி
ஒன்பது ஆண்டுகள் ஆகி உள்ளது..!
அது கூட உனது பார்வையில் படவில்லை..!
காரணம்...
உனது நடைப்பயணம்
ஊர் சுற்றும் உல்லாச நடை பயணம்..!
மக்களை ஏமாற்றுவதற்காக
நீ ஏதோ உத்தமன் போல சொக்கத்தங்கம் போல அடுத்தவரைக் குற்றம் சாட்டி பதவிபிடிக்க நடக்கிறாய்..!
நீ முட்டி போட்டு நடந்தாலும் பதவியை எட்டிப் பிடிக்க முடியாது..!
மக்கள்
பைத்தியத்தை
வேடிக்கை பார்ப்பதற்குக்கூட கூட்டம் கூடுவது உண்டு..!
இங்கே
உனக்குக் கூடும் கூட்டம்
எந்த வகையைச் சார்ந்ததோ..?
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA
.jpeg)
No comments:
Post a Comment