Monday 20 February 2023

சிறைப் பறவை பெற்ற சுதந்திரத்தால், ஊர் சுற்றும் உல்லாசப் பறவை..!

தொண்ணூறு மணிநேரத்தில் 10,800 கி.மீ 
விமானத்தில் பயணித்த , 
மோடியின் பயணத்துக்கு நடைபாவாடையை விரிக்கும் பத்திரிக்கைகள்!

மக்கள் ஒற்றுமையை ஓங்கி ஒலித்து, ஒருமைப்பாட்டை வலியுறுத்தி,
4080 கி.மீ நடைபயணத்தில் 
மக்களின் மனம் கவர்ந்த மாவீரர், 
இளம் தலைவர், 
இந்திய தேசத்தின் விடிவெள்ளி-
இராகுல் காந்தி அவர்களின்
புரட்சிப் பயணத்தால் மிரட்சியடைந்துபோன-பிரதமரின் மாயாஜால வித்தைதான் -அவரின் இந்த விமானப் பயணம்.

"டீ வாலா"வுக்கு - விமானப் பயணத்தில் 
நாளுக்கு மூன்று வகை உடுப்புகள்.-ஆனால், 
"டீ-ஷர்ட்" மட்டுமே - நடைபயணத்தில்  தேசமெங்கும் 
திக் விஜயம் செய்து - புதிய வரலாறு படைத்தது. 

ஏர் பிடித்து-நிலம் உழுத உழவனுக்கு நெல்மணிகளின் விளைச்சல், 
எம் தலைவன் நடைபயணித்து-நானிலம் உழுததால்,
போகுமிடமெல்லாம், 
பாசக் கண்மணிகளின் விளைச்சல். 
மக்கள் வெள்ளத்தில் எம் மன்னவனின் பவனி!

இது,
தேச விடுதலையில் தோய்ந்து போன-நேரு குடும்பத்திற்கு மக்கள் காட்டிய நன்றி!


1921-ல் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின்-இந்திய வருகையை எதிர்த்து,
தேசப்பிதா மகாத்மா காந்தியின் தலைமையில், 
மோத்திலால் நேருவும், ஜவகர்லால் நேருவும்-ஆக,
தந்தையும் மகனுமாக இணைந்து,
சிறை புகுந்தார்கள். 

தொடர்ந்து, 
சைமன் கமிஷனை எதிர்த்து, 
லாலா லஜபதிராய்  தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் - ஜவகர்லால் நேரு, 
காவல் துறையின் தடியடிக்கு ஆளானார்கள்.

அதைத் தொடர்ந்து, 
லக்னோ சிறைச்சாலை, 
நைனிடால் சிறைச்சாலை, 
எரவாடா சிறைச்சாலை, 
அலிப்பூர் சிறைச்சாலை, 
டெஹ்ராடூன் சிறைச்சாலை-ஆகிய சிறைச்சாலைகளில்,
சிறைப்பறவையாக ஒன்பதாண்டுகள் பறந்தது வரலாறு.

இது மட்டுமல்ல...,

ஏக காலத்தில்,
மோத்திலால் நேரு, 
ஜவகர்லால் நேரு-மற்றும் 
திருமதி கமலா நேரு-ஆகிய மூவரும்,
தேச விடுதலை வேள்வியில் 
வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அப்போது-இந்தியாவின் ஜோன் ஆஃப் ஆர்க்,
இந்திரா பிரியதர்ஷினிக்கு அகவை ஐந்து. வீட்டில் பணிப் பெண்களின் பாதுகாப்பில் இருந்த வரலாற்றை நினைக்கும் போது விழிகளில் கண்ணீர் வழிகின்றது!

வரலாற்றைத் திரிக்க முனையும் - வக்கணையாளர்களுக்கு நினைவூட்டி எச்சரிக்கின்றேன். 

நேரு குடும்பத்தின் மீது,
இந்திய மக்கள் கொண்டுள்ள பாசம்,
ஆழி சூழ் உலகமே அழிந்தாலும்-அழியாது! 
அழிக்க நினைப்பவன்,
அழிந்தே போவான் போ..!

வாலாஜா ஜெ.அசேன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
20.02.2023

1 comment:

  1. ராகுல்காந்தியின் நடைப்பயணத்தை விமர்சிப்போரை வேரறுக்கும் விளக்க அறிக்கை.

    ReplyDelete