Sunday 30 April 2023

குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடகத் தேர்தல்!

 2024 இல் நடக்கப் போகும் குருக்ஷேத்திர யுத்தத்தின் முன்னோட்டம்தான் கர்நாடக தேர்தல்!

நள்ளிரவில் நாட்டுக்கு  விடுதலை..!
சுதந்திர இந்தியாவின் கையில் பிச்சைப் பாத்திரம்..!

அன்று,
கோமான் நேருமகான்
நெஞ்சில் பூத்த திட்டங்களால் இந்தியா பெற்றது அட்ஷயப் பாத்திரம்!
இந்தியத் தீபகற்பத்தின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்த்தது!

இன்று...
மதவெறி போதையூட்டி
பதவி போகத்தில் புரளும் ஒரு கூட்டம் நம்மை
அடிமையாக்கிவிட்டது!

'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்ற பொய்யாமொழிக்கு புகலிடமாக்கிவிட்டது!

கொலைக் குற்றவாளிகளுக்கு விடுதலை...
கற்பைச் சூறையாடியவர்களுக்கு விடுதலை...
வங்கி மோசடியாளர்களுக்கு விடுதலை...

₹20,000 கோடி மறக்க முடியுமா..!
கொள்ளையர்களை அடையாளம் காட்டியவருக்கு மட்டும் சிறைச்சாலை...

விநோதம்... விநோதம்... இதுதானோ கூர்ஜ்ஜரத்தின் நீதி...
பாரதத்தின் மேல் படர்ந்திருக்கும் அழியாப் பழி..!

ஆண்டப் பரம்பரையடா..!
விடுதலை வேள்வியில்
மாண்ட பரம்பரையடா..
அடங்கிக் கிடப்பதோ..?
அறிவீனம்... அறிவீனம்..!

தியாகத்தின் தாயகம் தேசிய காங்கிரஸ் அல்லவோ..!

தோளை உயர்த்தடா...
தியாகப் பரம்பரை வழிவந்த
நம் தலைவன் ராகுலை வாழ்த்தடா!

உரிமை இழந்து ஊழியம் செய்து வாழ்வதைவிட உயிரைக் கொடுப்போம்..!
கர்நாடகம் அழைக்கிறது வா..!

களம் காண்போம்..! கர்நாடகத்தை மீட்டெடுப்போம்..!
வெற்றிவாகை சூடுவோம்..!

2024 குருக்ஷேத்திர
யுத்தத்திற்கு முன்னுரை வரைவோம்!
வா... வா... வா..!

வாலாஜா ஜெ.அசேன், Ex. MLA,



Friday 7 April 2023

இராகுல் காந்தியைப் பழி வாங்கும் மோடி அரசைக் கண்டித்து வாலாஜாப்பேட்டையில் பொதுக்கூட்டம்

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்றும் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பிய இராகுல் காந்தி அவர்களுக்கு சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியைப் பறித்தும் பழி வாங்கும் மோடி அரசின் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்து, வாலாஜாபேட்டை இராகுல் காந்தி பாசறை சார்பில் வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் 07.04.2023 வெள்ளிக்கிழமை மாலை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது

நாவுக்கரசர் நாஞ்சில் சம்பத் அவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோடீஸ்வரன், பூக்கடை மணி, நியாஸ், தீனா, உத்தமன், மற்றும் பேராசிரியர் அன்பு, மனித உரிமை செயல்பாட்டாளர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
 
இந்தப் பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




தீர்மானம்
-1
 
ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி-மோடி இருவரின் கள்ளக் கூட்டு குறித்தும், ஷெல் கம்பெனிகளில் அதானி பெயரில் குவிந்து கிடக்கும் 20 ஆயிரம் கோடி ரூபாய் யாருடையது என்பது குறித்தும் இராகுல் காந்தி அவர்கள்

தொடுத்தக் கேள்விக் கணைகளால் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது மோடி அரசு. இராகுல் காந்தி அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல திராணியற்ற மோடி அரசு, பழைய வழக்கு ஒன்றை தூசு தட்டி, இராகுல் காந்தி அவர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பறித்து, அவர் குடியிருந்த அரசு குடியிருப்பையும் காலி செய்யச் சொல்லி பழி வாங்கி வருகிறது மோடி அரசு. இது பாரம்பரியமான நேரு குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி எழுப்புகின்ற கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கையாகும்.
 
இளம் தலைவர் இராகுல் காந்தி அவர்களுக்கு எதிரான மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம் - 2
 
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கிய பிறகு தமிழ்நாடு கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடிப்பதற்கு மிகவும் சொல்லொன்னாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். அனிதாவைத் தொடர்ந்து எண்ணற்ற மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகின்றனர். மாணவர்களின் உயிர்காக்க வேண்டி, நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைத்தது.
 
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை புறந்தள்ளி வரும் மோடி அரசை வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
 
தீர்மானம்-3
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கிக் கொண்டு, பணத்தை இழந்து எண்ணற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்கொலை செய்து வருகின்றனர். எனவே இளைஞர்களின் தற்கொலையை தடுத்து நிறுத்தும் வகையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் எனக் கோரி ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏகமனதாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைத்துள்ளது.
 
ஆனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தீர்மானத்தை நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டுள்ளார் ஆளுநர் ரவி.
 
"சரியான காரணமின்றி ஆளுநர் ஒரு மசோதாவைத் தடுத்து நிறுத்தினால், அது நாட்டில் ஜனநாயகம் இறந்து விட்டதாகப் பொருள்படும்"
 
ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்யக் கோரும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தைக் கிடப்பில் போடும் ஆளுநர் ரவியை, வாலாஜாபேட்டை, “இராகுல் காந்தி பாசறை” இந்தப் பொதுக் கூட்டத்தின் வாயிலாக மிக வன்மையாகக் கண்டிக்கிறது.




 

Thursday 6 April 2023

CBI வைர விழாவில்…. மோடிஜியின் இதழ்கள் உதிர்த்த முத்துக்கள்!

"ஜனநாயகம் மற்றும் நீதிக்கு, 
ஊழல் மிகப் பெரியத் தடையாக உள்ளது. 
ஊழலிலிருந்து நாட்டை விடுவிப்பதே
மிக முக்கியக் கடமை!" – மோடி

இது,
BJP ஆட்சியில், ஊழலை ஒழிக்க 
முடியவில்லை…என்பதற்கான
மோடிஜியின், ஒப்புதல் வாக்குமூலம்!

ஆட்சிக்கட்டிலில் ஒன்பதாண்டுகள்,
ஊஞ்சலில் ஆடி…., உய்யலாலா பாடி..
எதிர்க்கட்சிக்கார்களைப் பழி … வாங்கி 
உலகம் முழுவதும் ஒய்யார பவனி 
நடத்திய பிறகு….,ஊழல் குறித்து….
உதித்ததோ ஞானோதயம்….மோடிஜிக்கு?

”அம்பானி பணம் 
20 000 கோடி ரூபாயின்
நதி மூலம், ரிஷி மூலம் யாதோ?”
என,
இராகுல் காந்தி தொடுத்தக் 
கேள்விக் கனைகளால் விழி பிதுங்கி 
அம்மணமாய்…அம்பலமான பிறகு
மோடிஜி மீதே …
ஊழல் மேகம் குடை பிடிக்கிறது!


“மங்கை சூதானால் கங்கையில் குளிக்கலாம்…. 
ஆனால், 
அந்தக் கங்கையே சூதானால்….?”
காரைக்குடி கவிஞனுக்கு 
உங்கள் பதில்தான் என்ன?


மன்கிபாத்… எனும் பயனில்லாப் பேச்சு!
அது…மக்களுக்கோ புரிஞ்சு போச்சு
நீங்கள் 
மூட்டை கட்டும் காலம் வந்தாச்சு!
”விடியுமா?” என்பதே
இன்றைய மக்களின் 
ஏக்கப் பெருமூச்சு!

ஊழலிலிருந்து….நாட்டை மீட்க
ஆட்சிக் கட்டிலிலிருந்து…மோடியை அகற்ற 
வேண்டும் என்பதே…மக்களின் 
ஏகோபித்தப் பேச்சு!

வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

Wednesday 5 April 2023

இராணிப்பேட்டையில் முற்றுகைப் போராட்டம்: காங்கிரசார் கைது!

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானிக்கும் மோடிக்கும் இடையிலான கள்ள உறவு மற்றும் நிதி மோசடி குறித்து கேள்வி எழுப்பிய இராகுல் காந்தியைப் பழிவாங்கும் பாஜக அரசைக் கண்டித்து, இராகுல் காந்தி பாசறையைச் சேர்ந்த காங்கிரசார், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 05.04.2023 அன்று காலை 11.00 மணி அளவில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு மாநில துணைத் தலைவர் கோடீஸ்வரன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் நியாஸ், சசிகுமார், இராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் முருகன், வாலாஜா நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை மணி, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் ஜானகிராமன், இராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட சுமார் 130 பேர் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். 













Monday 3 April 2023

முற்றுகைப் போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்!

இடம்: இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

நாள்: 05.04.2023, புதன்கிழமை காலை 10 மணி அளவில்
*****
அந்நிய நாடுகளில் 
ஆளில்லா ஆலைகளின்
20 ஆயிரம் கோடி ரூபாய் 
அதானயிடம் அடைக்கலமானது எப்படி?
அதானிக்கும் மோடிக்கும் உள்ள உறவு என்ன?

1914 இல்,
ஜெய்ஹிந்த் செண்பகராமன் 
மதரசாப் பட்டினம் மீது 
எம்டன் குண்டு வீசினார்!

2023 இல்,
அன்னை பாரதத்தின் 
அருந்தவப் புதல்வன் 
இராகுல் காந்தியோ
கபடவேடதாரி மோடியின் 
கருப்புப் பணம் மீது 
ஏவு’கணை’ வீசி உள்ளார்!

பி.ஜெ.பி - அதிகார வர்க்கம் அரண்டுபோனது!
மோடிஜி அதிகார போதையின் 
அடித்தளமே ஆட்டம் கண்டது!
மற்றவர்களைக் குற்றவாளியாக்கி 
மனம் குளிர்ந்த மோடிஜி
இன்று,
குற்றச் சூறாவளியில் 
சிக்கித் தவிக்கிறார்!
உலகப் பார்வையில்
மோடியின் பிம்பம் 
உருக்குலைந்து நிற்கிறது!

திசை திருப்பும் முயற்சியாக,
பொய் வழக்குப் புனைந்து 
அஞ்சா நெஞ்சன் 
ஆற்றல் மறவன் 
தியாகப் பரம்பரையின் 
திசைகாட்டும் கலங்கரை விளக்கு!

சிறைக்கோட்டம் பூந்தோட்டமென
அடக்கு முறையை எதிர் கொண்ட
அடலேறு இராகுல் காந்தி அவர்களை 
நீதிமன்றம் வாயிலாக
இரண்டாண்டு சிறைப் படுத்தி
பழிவாங்கத் துடிக்கிறது!

நீதி கேட்டு முற்றுகையிவோம்! 
மோடிஜியின் ஆட்சிக்கு 
முடிவுரை எழுதுவோம்!
திரண்டு வா!....வா!

தியாகத் தலைவன் இராகுல் காந்தி பாசறை,
வாலாஜாப்பேட்டை