Monday 27 March 2023

அதானி: அசுர வளர்ச்சியின் புள்ளி ராஜா!

 
சிங்கக் குட்டியை
சிறையில் அடைத்து
சீற்றத்தை அடக்குவியோ…?
 
சிம்புட் பறவையின்
விடுதலை தாகத்தை
வெத்து வேட்டுகளால்
வீழ்த்த முடியுமோ…?
 
போடா…
போ….களா?
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,
 
*****


அதானி: அசுர வளர்ச்சியின் புள்ளி ராஜா!
 
“Red Alert” ஒளிர்கிறது!
 
இராட்டை சுற்றி
நாட்டை மீட்ட
பாட்டனின் பேரன்!
 
பாராளுமன்றத்தில்
பேசவிட்டால்
மன்கி பாத்தின்
கிங்கிணியும்
கீழே விழுந்து விடும்!
எனவே,
தடை போட்டு
தடுக்கும் முயற்சி!
 
இரத்தச் சுவடு பதித்த
பரம்பரையின்
விடிவெள்ளி!
தடையை
தன் நடையால்
தகர்த்தெறியும்
வல்லமை வாய்ந்த
இராகுல்!
 
விடியலின்
வெளிச்சம் தெரிகிறது!
விலகப் போகுது
இருளாட்சி!
 
தேசியத் தோழனே!
தேசப் பகையை
வெல்வோம் வா…!
கபட வேடதாரிகளின்
கனவைத் தகர்ப்போம் வா…!
 
Do or Die
தேசப்பிதாவின்
வார்த்தைக்கு
வடிவம் கொடுப்போம் வா…!
 
வாலாஜா ஜெ.அசேன், Ex.MLA.,

No comments:

Post a Comment