Friday, 26 May 2023

நீதி வழுவினால் வளைந்து உயிர்குடிக்கும் தமிழ்ச் செங்கோல்..!

நீதி வழுவினால் 
வளைந்து உயிர் குடிக்கும் 
தமிழ்ச் செங்கோல்..!

மன்னர் ஆட்சியின் மாட்சிமைக்கு
அடையாளம்‌ செங்கோல்..!
ஆங்கிலேய மன்னர்களிடமிருந்து
அடிமை விலங்கொடித்து-நமது 
பாரத தேசம் சுதந்திரம் பெற்று
மக்களாட்சி மலர்ந்தது..!

ஆட்சி மாற்ற நினைவாக
குல்லுபட்டர் ராஜாஜியின் 
ஆலோசனைப்படி
மௌண்ட்பேட்டன் பிரபு மூலமாக
உம்மிடி பங்காரு செட்டியின் நகைக்கடையில்
தயாரித்து வழங்கப்பட்டதுதான்
இந்தச் செங்கோல்.
இது சோழர்காலத்து
செங்கோல் அல்ல..!

அப்போதையப் பிரதமராக இருந்த
நமது நேருபிரான்
மக்கள் ஆட்சி மலர்ந்த பிறகு
மன்னராட்சி தேவையில்லையென
அந்தச் செங்கோலை அலகாபாத்
அருங்காட்சியகத்தில்
காட்சிப் பொருளாக்கினார்.

மன்னர்களையும்
மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும்
காங்கிரஸ் பேரியக்கம் 
ஒழித்தது என்பதை 
நமது தேசமே அறியும்..!

தற்போது 
தன்னை அறிவிக்கப்படாத மன்னராக
தன்னை தனக்குள் நினைத்துக் கொண்டுள்ள
நரேந்திர மோடிஜி
அரசியல் சட்டத்தை அப்பட்டமாக
அடிக்கடி மீறுவதன் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார்.

நமது அரசியலமைப்பின்படி
ஜனாதிபதியே முதல் குடிமகன்.
பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைக்காமல் 
இருப்பதுவும் அதற்குச் சான்று.
அடிக்கல் நாட்டுவதும் அவரே...
துவக்கி வைப்பதும் அவரே...
இப்படி எல்லாமுமாகி
நிற்கவேண்டுமென 
விரும்புவதன்மூலம்
தன்னை மன்னராக
வெளிப்படுத்திக் கொள்கிறார்.

நீதி வழுவாத ஆட்சியின்
சின்னம் செங்கோல்.
கற்புக்கடம் பூண்ட பொற்புடைய
தெய்வம் கண்ணகியின் வழக்கில்...
நீதி தவறி செங்கோல்
வளைந்ததை உணர்ந்த
பாண்டிய நெடுஞ்செழியன்...
யானோ அரசன்.? யானே கள்வன்...!
எனக்கூறி‌ சிம்மாசனத்திலிருந்து
கீழே விழுந்து உயிரைத் துறந்தான்.

பாராளுமன்றத்தில் 
செங்கோலை பதிக்கப்பட்ட பிறகு நடைபெறுகின்ற
பாராளுமன்ற விவாதங்களில்
துணிச்சல் மிக்க தும்பி
மக்களின் மனங்கவர்ந்த நல் நம்பி
ராகுல் காந்தி அவர்கள் 
20 ஆயிரம் கோடி 
அதானி கணக்கில் வந்தது எப்படி 
என வழக்குத் தொடர்ந்து
நீதி நிரூபிக்கப்பட்டால்-மோடிஜி 
பாண்டிய நெடுஞ்செழியனைப் பின்பற்றுவாரா..!

வாலாஜா ஜெ.அசேன். Ex MLA.,


No comments:

Post a Comment