படமல்ல...தடுப்பில்லா
துயர வெள்ளம்..!
துயரத்தில் துவண்டு
தலைகவிழ்ந்த சிறுமிக்கு
தலைவனின் ஆறுதல்
அணைப்பு..! தேறுதல்
வார்த்தைகள்..!
இழப்பை...
வார்த்தையால் அல்ல...
விழிகளின் ஓரத்தில்
கசியும் கண்ணீரால்
துயரக் கதையை
உணர்த்திவிட்ட சிறுமி..!
இது ஒரு படம் மட்டுமல்ல...
நூற்றுக்கணக்கான
படங்கள் பதிவிடப்படாமல்
புதைந்து போய்விட்டன..!
தலைகவிழ்ந்தது
சிறுமியல்ல...
உலகின் முன்
இந்தியாவே தலைகவிழ்ந்து
நிற்கிறது..!
மணிப்பூரில் பாரதமாதாவின்
துகிலுரியப்பட்டு...
அப்பப்பா...
வேதனையடா..!
காப்பாற்ற
கண்ணனும் வராமல்
கண்ணயர்ந்து போனானே..!
விடியாதோ...
விடியாதோ...
இன வெறியர்களின்
பேயாட்டம் விடியாதோ..!
வடியாதோ...
வடியாதோ...
அப்பாவி மக்களின்
துயர வெள்ளம் வடியாதோ..!
மாளாதோ...
மாளாதோ...
மணிப்பூரின்
மரண ஓலம் மாளாதோ..!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA

 
No comments:
Post a Comment