Friday, 19 December 2025

கரூர் துஷ்ட தேவதையின் பகற்கனவு!

தமிழினத்தின் காவல்தெய்வமாய்,
தமிழினக் கலாச்சார,
பண்பாட்டு,, பாதுகாப்பு
அரணாக உள்ள..,
அண்ணா கண்டெடுத்து.,
கலைஞரால் வளர்த்தெடுத்த
தாய்க் கழகத்தை.,

பேசமுடியாத ஊமையான
மகனொருவன்.,
எப்போது பேசுவான் என எதிர்பார்த்தபோது..,


"அம்மா நீ எப்போது தாலியறுப்பாய்"
என்று பேசியதுபோல்
திமுகவை திடீரென தாக்கிப் பேசுவது..,
கோடைக்கால சூரியனை,
கார்கால மின்மினி பழிப்பதற்கு
ஒப்பாக இருக்கிறது..!

அண்ணாவின்
நிழலில் வளர்ந்து,
கழகத் தோழர்களால்
போற்றப்பட்ட,
வள்ளல் 
எம்ஜிஆர் அவர்களாலும்_,
மோடியா லேடியா
என சவால்விட்ட
அயர்ன் லேடியாலும்
அழிக்க முடியாதபோது..,

கரூர் நரபலி
துஷ்ட தேவதையால்
மட்டும் அழித்துவிட முடியுமா.?

இயக்கம் துவக்கும்போது
அதன் தலைவர்கள்,
நாட்டின் வளர்ச்சியைப்பற்றி
பேசுவது
அரசியல் கண்ட வரலாறு.!

தட்டினால் தங்கம்,
வெட்டினால் வெள்ளி,
இடித்தால் இரும்பு..!
வளம்கொண்ட தமிழகத்தை
ஆட்சிக்கு வந்தால்
செழிப்பாக்குவேன் என்றார்..,
"பேரறிஞர் அண்ணா" .!

என்ன வளம் இல்லை
இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும்
வெளிநாட்டில் என்றே
முழங்கினார்
"புரட்சித் தலைவர்".,.!

ஆனால்.,
ஆரம்பத்திலேயே
அழிப்பேன்.,
ஒழிப்பேன் என்ற
முழக்கத்துடன்
பயணத்தைத் துவக்கியுள்ளது
இந்த "துஷ்ட தேவதை"...,..!

2026 இல் நடைபெறப்போகும் தேர்தல்,
அரசியல் ரீதியான போட்டியல்ல..!
குஜராத் கும்பனி ஆதிக்க
வெறிக்கு எதிராக
தமிழ் மொழியையும்,
தமிழ் இனத்தையும்,
தமிழ் கலாச்சாரத்தையும்,
காக்கப் போராடும் களம்..!

ஒரிசா தேர்தலில்
தமிழனைத் திருடன்
என வர்ணித்தும்,
பீகார் தேர்தலில்,
தமிழகத்தில் பீகாரிகள்
தாக்கப்படுகிறார்கள் என
பழிசுமத்தி,
தமிழினத்தின் மீது
விரோதத்தை வளர்த்துவரும்
பாஜகவிற்கு எதிராக
குரல்கொடுக்க திராணியற்றவர்களை நம்பத் தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.!

தமிழகம் இன எழுச்சி எரிமலை.!
மொழி காக்க புயலெனப்
போராடத் துடிக்கும்
மறவர்களின் கோட்டம்.!

தாய் எட்டடி பாய்ந்தால்
குட்டி பதினாறடி பாயும் என்பதை மாற்றி, முப்பத்திரண்டு அடி
பாய்ந்து, இந்தியாவிலேயே
அனைத்துத் துறைகளிலும்
தமிழகத்தை முன்னோடியாக
தலைநிமிரச் செய்த
தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை
வீழ்த்த நினைப்பது...

கொல்லன் உலைக்கு
தாங்காத மோதிரம்,
தகிக்கும் சூரியனையே
தன் வாய்க்குள்
விழுங்க நினைக்கும்
விசித்திரம்..!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA