மணிமேகலை காப்பிய வரிகளுக்கு மோடியின் ஆட்சியே சாட்சி!
ஐம்பெரும்
காப்பியங்களில்
ஒன்றாகத் திகழும்
மணிமேகலை காப்பியம்
நீதி தவறி
ஆட்சி புரியும்
மன்னனைக் கொண்ட நாடு
இயற்கை
இன்னல்களால் அல்லலுறும் நாடு
மயான
பூமியாகும்
என்பதை..,
"கோல் நிலை திரியின்
கோள் நிலை திரியும்..!
கோள் நிலை திரியின்
மாரி வரங் கூறும்.
மாரி வரங் கூறின்l
மன்னுயிர் இல்லை..!
மன்னுயிர் எல்லாம்
மண்ணாள் வேந்தன்
தன்னுயிர் என்னும்
தகுதியீன்றாகும்..!"
ஒரு நாட்டின்
செங்கோல் ஆட்சி
தவறுமானால்
இயற்கை தன்னியல்பை
இழக்கும்...
மழை பெய்யாது
கெடுக்கும்...
அதிகம் பெய்தும்
கெடுக்கும்..!
அரசனின்
ஆட்சிக்குட்பட்ட
மக்களே
அரசனுக்கு உயிர்
போன்றவர்கள்.
இந்த உயிர்கள்
பாதிக்கப்பட்டால்
நாடே மயானமாகும்..!
மேற்கண்ட வரிகளை
இன்றைய
பாரதத்தின் நிலையோடு
ஒப்பிட்டுப் பார்க்கும் போது
ஹிமாச்சல பிரதேசம்,
டெல்லி, பஞ்சாப்,
ஹரியானா, உத்தரகாண்ட்,
உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில்
வெள்ளத்தின் ஆட்சி
மக்களின் உயிரோடு
விளையாடிக்
கொண்டிருக்கிறது..!
மணிப்பூர் மாநிலமோ
சொந்த மண்ணிலேயே
மக்கள் அகதிகளாக
அலையும் அவலநிலை..!
அங்கே தீவிரவாதம் தலைவிரித்தாடுகிறது.
மௌனத்தில் மோடிஜி..!
இயற்கையின்
உபாதைகள் மட்டுமல்ல...
கோர ரயில் விபத்துகள்,
பேருந்து விபத்துகள்,
பணமதிப்பிழப்பு,
வழக்கத்துக்கு மாறான
இதுவரையில்லாத அளவில்
விலைவாசி உயர்வு,
மணிமேகலை
காப்பிய வரிகளுக்கு
சாட்சியாக உள்ளது.!
மனசாட்சியின் குரலாக
மாதந்தோறும்
தற்பெருமைகளை
அலம்பலாக்கும் மோடி
நிலைமைகளை
உணர்ந்து உடனடியாக
ராஜினாமா
செய்ய வேண்டும்..!
இன்றேல் மக்களால்
தூக்கி எறியப்படும்
அவலநிலைக்கு
உள்ளாவார்..!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA
No comments:
Post a Comment