Friday, 27 March 2026

இராணிப்பேட்டை தொகுதியின் விடியலுக்கு வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்ற உறுப்பினராவது 'காலத்தின் கட்டாயம்'!

முன்னுரை

ஒரு ஊரின் வரலாறு சிதைக்கப்படும்போதும், அதன் இயற்கை வளம் நஞ்சாக்கப்படும்போதும், அந்த மண்ணை மீட்டெடுக்க ஒரு தார்மீகக் குரல் தேவைப்படுகிறது. அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இராணிப்பேட்டை தொகுதியின் பிரதிநிதியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ. அசேன் (BA, BL) அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது வெறும் அரசியல் விருப்பம் அல்ல; அது அந்த மண்ணின் காலத்தின் கட்டாயம்.
1. முதல் நகராட்சியின் பெருமையை மீட்டெடுக்க...

1866-ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதல் நகராட்சி என்ற பெருமை வாலாஜாபேட்டைக்கு உண்டு. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகராட்சியின் தலைவராக (Chairman) சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் திரு. அசேன் அவர்களுக்கு உண்டு. நகராட்சி நிர்வாகத்தில் அவர் காட்டிய நேர்மையும், தொலைநோக்குப் பார்வையும் இன்றும் மக்களால் பேசப்படுகிறது. இன்று அந்தப் பெருமை மங்கி வரும் நிலையில், அதை மீட்டெடுக்க அனுபவம் வாய்ந்த ஒரு நிர்வாகி தேவை.

2. கவிஞர், வாசகர், தமிழ் மொழி ஆர்வலர்: ஒரு பண்பாட்டு அடையாளம்

அரசியல் களத்தைத் தாண்டி, திரு.அசேன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், தீவிர வாசிப்பாளர் மற்றும் தமிழ் மொழி ஆர்வலர். "முத்தமிழ் சுவைச் சுற்றம்" என்கிற இலக்கிய அமைப்பின் மூலம் ஆண்டுதோறும் இலக்கிய விழாக்களை நடத்தி, இளம் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தி வருகிறார். அவரது ஆழமான கவிதைகளை “நீதிக்கான குரல்” வலைப்பக்கத்தில் காணலாம். மேலும், ஆண்டுதோறும் சமத்துவப் பொங்கல் விழாவை முன்னின்று நடத்தி, சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறார்.

3. ஒரு இளைஞனைப் போன்ற களப் போராட்டங்கள்!

வயது என்பது வெறும் எண் மட்டுமே என்பதை நிரூபிக்கும் வகையில், இன்றும் ஒரு இளைஞனைப் போலத் துடிப்போடு களத்தில் நிற்பவர் திரு. அசேன்.

தேசியப் பிரச்சினைகள்: CAA, NRC மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற விவகாரங்களில் ஜனநாயகத்தைக் காக்க வீதியில் இறங்கிப் போராடியவர்.

உள்ளூர் பிரச்சினைகள்: ஊழல் முறைகேடுகள், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் சாலை மாடுகளைக் கட்டுப்படுத்த நகராட்சிக்கு எதிராகப் போராட்டம் என மக்களின் அன்றாடத் துயர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

சுற்றுச்சூழல் போர்: உலகின் 3-வது மாசடைந்த நகரம் - ஒரு அபாய எச்சரிக்கை!

இன்று இராணிப்பேட்டை உலகின் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. குரோமியக் கழிவுகள் மற்றும் ஆலைகளின் நச்சுக்கழிவுகளால் நிலத்தடி நீர் நஞ்சாகி, மக்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளாகச் சமரசமின்றிச் சுற்றுச்சூழல் போரை முன்னெடுத்து வருபவர் திரு.அசேன்.

அமைச்சர்களுக்கும், மத்திய அரசுக்கும் தரவுகளுடன் கடிதம் எழுதியதோடு, நேரடியாக டெல்லிக்குச் சென்று சுற்றுச்சூழல் அதிகாரிகளைச் சந்தித்து, நச்சு ஆலைகளுக்குக் கோடி கணக்கில் அபராதம் விதிக்கக் காரணமாக இருந்தவர்.

இந்தச் சாபக்கேட்டைத் துடைத்தெறிய, ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவருக்கு அதிகாரம் கிடைப்பது காலத்தின் தேவை.


4. 1989-ல் நிகழ்ந்த ‘மக்களின்’ வெற்றி!

1989 சட்டமன்றத் தேர்தலில், அப்போதைய அரசியல் சூழலில் அவருக்குத் தொகுதி ஒதுக்கப்படாதபோதும், மக்களின் பேராதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். கட்சிச் சின்னம் இல்லாமலேயே ஒரு மாபெரும் அலையை வென்று காட்டிய அவர், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் துணைத்தலைவராக (State Vice President) உயரிய பொறுப்பில் இருந்து வழிநடத்தி வருகிறார்.

5. ஏன் அவர் திமுக கூட்டணி வேட்பாளராக வேண்டும்?

அதிமுக கூட்டணியில் இத்தொகுதி தமாகா-விற்கு (தாமரை சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது, மதச்சார்பற்ற வாக்காளர்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், சிறுபான்மையினர் வாக்குகள், திமுகவின் வாக்கு வங்கி மற்றும் அசேனின் தனிப்பட்ட செல்வாக்கு ஆகிய மூன்றுமே இணைந்து ஒரு மிகப்பெரிய வெற்றியை உறுதி செய்யும்.

முடிவுரை

"நல்லவை அல்லவைகளை சீர்தூக்கிப் பார்க்கிற" ஆற்றல் கொண்ட இராணிப்பேட்டை மக்கள், இன்று ஒரு இக்கட்டான சூழலில் இருக்கிறார்கள். வரலாற்றுப் பெருமை கொண்ட ஒரு நகரை, நச்சுக்கழிவுகளின் பிடியிலிருந்து மீட்கவும், பண்பாட்டுச் செழுமையைப் பாதுகாக்கவும் தெரிந்த ஒரே ஆளுமை திரு. அசேன் அவர்களே!

இராணிப்பேட்டையின் விடியலுக்காகவும், வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்திற்காகவும் திரு.வாலாஜா ஜெ.அசேன் சட்டமன்றத்திற்குச் செல்வதே அந்த மண்ணிற்குச் செய்யும் உண்மையான நீதியாகும்!

பொன்.சேகர், BE. ML. MPhil,
(மேலாளர், பணி ஓய்வு, BHEL, Ranipet)
வழக்கறிஞர்

Friday, 16 January 2026

ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!

"ஒன்றும் தெரியாத பாப்பா போட்டுக்கொண்டாளாம் தாப்பா!" - எனும் கிராமத்துப் பழமொழிக்கேற்ப, ஊழலின் உச்சம் தொட்டவர்கள் இன்று உத்தமர் வேஷம் போடுகிறார்கள்!

'ஆட்சியில் ஊழல், ஊழல், ஊழல்' என்று ஊர் ஊராகப் பல்லிளித்துப் பேசி வருகிறார் பழனிசாமி..!

  • அடையாளம் தெரியாமல் இருந்த அக்ரகாரச் சிறையை, அகில இந்தியாவிற்கும் அடையாளம் காட்டியது யார் ஆட்சி?

  • செயின்ட் ஜார்ஜ் கோட்டையை கோட்டைவிட்ட பிறகு, நீதிமன்ற வளாகங்களில் உலாவரும் முன்னாள் அமைச்சர்கள் எந்தக் கட்சி?

  • குட்கா ஊழல் வழக்குத் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிடலாமா?

அங்கிங்கெனாதபடி ஊழல் செய்ததால் அமலாக்கத் துறையிடம் மாட்டி, அமித்ஷாவிடம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துச் சோரம் போனவர்களா வீரம் பேசுவது? அமித்ஷாவின் உடல் அசைவுக்கு ஏற்ப அம்மிக்கல்லாய் உருளும் அர்த்தநாரிகள் மீண்டும் ஆளக் கனவு காண்பதா, ஊர்ந்து ஊர்ந்து சென்று பாத பூஜை நடத்திப் பதவி பெற்றவர்!

தியாகக் கனலில் புடமிடப்பட்டு, பொதுநலத்தில் தன்னை அர்ப்பணித்து, தமிழகத்தின் வரலாற்றையே மாற்றி, நிர்வாகத் திறனில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகத் தலைநிமிரச் செய்தவர் நம் முதல்வர். தமிழ் மணம் கமழப் புத்தாண்டை மலரச் செய்த வித்தகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை, இனப்பற்றற்ற, மொழிப்பற்றற்ற பாதம் தாங்கிகள் வீழ்த்த நினைப்பது துரோகத்தின் உச்சகட்டம்!

எம்.ஜி.ஆர் அவர்களாலும், அம்மையார் ஜெயலலிதாவாலும் இரும்புக் கோட்டையாகக் கட்டியமைக்கப்பட்ட அதிமுகவை மணல் கோட்டையாக்கிச் சிதைத்து, விழுதுகளையெல்லாம் வெளியேற்றி, கட்சியை அடமானம் வைத்தது போல் தமிழகத்தின் உரிமைகளையும் அமித்ஷாவிடம் அடமானம் வைக்க ஆலாய்ப் பறந்து கொண்டிருக்கிறீர்கள்!

தங்களின் பேச்சு "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானமேறி வைகுண்டம் காட்டுவேன்" என்று கூறுவதைப் போன்ற வெற்றுப் பேச்சு! வரலாறு உங்களை ஒருபோதும் மன்னிக்காது!

- வாலாஜா அசேன், முன்னாள் MLA