2024 தேர்தல் களத்தில்...
பாடப்போவது
அடிமை கீதமா? விடுதலை கீதமா?
பாடப்போவது
அடிமை கீதமா? விடுதலை கீதமா?
*****
அழிக்க நினைப்பவரின்
பாதார விந்தங்களுக்கு
பணிவிடை செய்யும்
ஈபிஎஸ் ஓபிஎஸ்..!
தகுதியான தலைமையின்றி
தண்ணீரில் தாமரையாக
தள்ளாடும் தலைவர்களால்
தற்கொலை வழியில் அதிமுக..!
தண்ணீரில் தாமரையாக
தள்ளாடும் தலைவர்களால்
தற்கொலை வழியில் அதிமுக..!
1984 இல்
மக்கள் தலைவர் *எம்ஜிஆர்*
மரணப்படுக்கையில் விழுந்த போது
அன்றைய இந்தியப் பிரதமர்
அன்னை இந்திரா காந்தி
அப்பல்லோ மருத்துவமனைக்கு
பறந்து வந்து..,
மருத்துவர்களின் ஆலோசனை பெற்று
விமான ஆம்புலன்ஸில்
அமெரிக்க பரூக்ளின்
மருத்துமனைக்கு அனுப்பியதால்
அன்று
எம்ஜிஆர் உயிர் பிழைத்தார்..!
எம்ஜிஆர் உயிர் பிழைத்தார்..!
1987 இல்
எம்ஜிஆர் மரணித்த பின்
"ஜா" , "ஜெ" என உடைந்த
அதிமுகவை ஒன்றிணைத்து
ஜெ வை முதல்வராக்கியது
காங்கிரஸ் பேரியக்கம்..!
2016 இல்
அயர்ன் லேடியாக
வர்ணிக்கப்பட்ட ஜெயலலிதா
உயிருக்குப் போராடிய நிலையில் இருந்தபோது..,
பிரதமர் நரேந்திர மோடி
அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை
வெளிநாட்டு மருத்துவம்
பெற அனுப்பி இருந்தால்...
ஒரு வேளை ஜெயலலிதா
பிழைத்திருக்கக் கூடும்.
மாறாக...
அதிமுக-வின் தலைமையில்
வெற்றிடம் ஏற்பட்டால்
பாஜக-வைக் கொண்டு
நிரப்பலாம் என்று
மனப்பால் கொண்டார்..
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்
பார்வையாளராக
பக்குவமாக வந்து
அதிமுக-வில் பிளவு
காண வைத்தார்..!
அதிமுகவின் அடி நாதத்திற்கு
அமித்ஷா ஆதார
புருஷனானார்..!
சுய சிந்தனை இழந்த அதிமுக
இரண்டு பட்டு
தமிழக அரசியலில்
இரண்டாம் இடத்தை
பாஜகவிற்கு
தமிழக அரசியலில்
இரண்டாம் இடத்தை
பாஜகவிற்கு
தாரைவார்க்கும் அவலநிலை..!
மாநிலங்களவையில்
பாஜகவின்
'டெல்லி அதிகார
குறைப்பு மசோதா'விற்கு
ஆதரவுக்கரம் நீட்டி
அடிமை சாசனத்தை
அறிவித்துவிட்டது
அடிமைகள் கூட்டம்..!
தலைசிறந்த
அரசியல் ஆளுமையான
எம்ஜியாரால் துவக்கப்பட்டு
தன்னிகரில்லா தைரிய மங்கை ஜெயலலிதாவால்
கட்டிக் காக்கப்பட்டு
கட்டிக் காக்கப்பட்டு
வளர்ந்தது அதிமுக..!
எந்த ஜெயலலிதாவால்
*மோடியா-லேடியா* என
சவால் விட்டு
ஜெயலலிதாவால்
தோற்கடிக்கப்பட்ட
மோடியின் காலில்
அதிமுக-வை சரணடைய வைத்திருப்பது..,
எம்ஜியாருக்கும்,
மோடியின் காலில்
அதிமுக-வை சரணடைய வைத்திருப்பது..,
எம்ஜியாருக்கும்,
ஜெயலலிதாவிற்கும் - செய்யும்
மாபெரும் துரோகமாகும்..!
இதயத் துடிப்பில் ஒலிக்கும்
லப்டப் லப்டப் ஓசையில்
எம்ஜிஆர், ஜெயலலிதா
எம்ஜிஆர், ஜெயலலிதா...
என்ற துடிப்பாக உணர்ந்து
மகிழும் தொண்டனே...
2024 தேர்தல் களத்தில்....
நீ பாடப் போவது
அடிமை கீதமா..?!
விடுதலை கீதமா..?!
முடிவு செய்..!
வாலாஜா ஜெ.அசேன் Ex MLA
No comments:
Post a Comment