Friday, 26 May 2023

நீதி வழுவினால் வளைந்து உயிர்குடிக்கும் தமிழ்ச் செங்கோல்..!

நீதி வழுவினால் 
வளைந்து உயிர் குடிக்கும் 
தமிழ்ச் செங்கோல்..!

மன்னர் ஆட்சியின் மாட்சிமைக்கு
அடையாளம்‌ செங்கோல்..!
ஆங்கிலேய மன்னர்களிடமிருந்து
அடிமை விலங்கொடித்து-நமது 
பாரத தேசம் சுதந்திரம் பெற்று
மக்களாட்சி மலர்ந்தது..!

ஆட்சி மாற்ற நினைவாக
குல்லுபட்டர் ராஜாஜியின் 
ஆலோசனைப்படி
மௌண்ட்பேட்டன் பிரபு மூலமாக
உம்மிடி பங்காரு செட்டியின் நகைக்கடையில்
தயாரித்து வழங்கப்பட்டதுதான்
இந்தச் செங்கோல்.
இது சோழர்காலத்து
செங்கோல் அல்ல..!

அப்போதையப் பிரதமராக இருந்த
நமது நேருபிரான்
மக்கள் ஆட்சி மலர்ந்த பிறகு
மன்னராட்சி தேவையில்லையென
அந்தச் செங்கோலை அலகாபாத்
அருங்காட்சியகத்தில்
காட்சிப் பொருளாக்கினார்.

மன்னர்களையும்
மன்னர்களுக்கு வழங்கப்பட்ட மானியத்தையும்
காங்கிரஸ் பேரியக்கம் 
ஒழித்தது என்பதை 
நமது தேசமே அறியும்..!

தற்போது 
தன்னை அறிவிக்கப்படாத மன்னராக
தன்னை தனக்குள் நினைத்துக் கொண்டுள்ள
நரேந்திர மோடிஜி
அரசியல் சட்டத்தை அப்பட்டமாக
அடிக்கடி மீறுவதன் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார்.

நமது அரசியலமைப்பின்படி
ஜனாதிபதியே முதல் குடிமகன்.
பாராளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு அவரை அழைக்காமல் 
இருப்பதுவும் அதற்குச் சான்று.
அடிக்கல் நாட்டுவதும் அவரே...
துவக்கி வைப்பதும் அவரே...
இப்படி எல்லாமுமாகி
நிற்கவேண்டுமென 
விரும்புவதன்மூலம்
தன்னை மன்னராக
வெளிப்படுத்திக் கொள்கிறார்.

நீதி வழுவாத ஆட்சியின்
சின்னம் செங்கோல்.
கற்புக்கடம் பூண்ட பொற்புடைய
தெய்வம் கண்ணகியின் வழக்கில்...
நீதி தவறி செங்கோல்
வளைந்ததை உணர்ந்த
பாண்டிய நெடுஞ்செழியன்...
யானோ அரசன்.? யானே கள்வன்...!
எனக்கூறி‌ சிம்மாசனத்திலிருந்து
கீழே விழுந்து உயிரைத் துறந்தான்.

பாராளுமன்றத்தில் 
செங்கோலை பதிக்கப்பட்ட பிறகு நடைபெறுகின்ற
பாராளுமன்ற விவாதங்களில்
துணிச்சல் மிக்க தும்பி
மக்களின் மனங்கவர்ந்த நல் நம்பி
ராகுல் காந்தி அவர்கள் 
20 ஆயிரம் கோடி 
அதானி கணக்கில் வந்தது எப்படி 
என வழக்குத் தொடர்ந்து
நீதி நிரூபிக்கப்பட்டால்-மோடிஜி 
பாண்டிய நெடுஞ்செழியனைப் பின்பற்றுவாரா..!

வாலாஜா ஜெ.அசேன். Ex MLA.,


Monday, 22 May 2023

கர்நாடகத் தேர்தலில் விலை போகாத ரூபாய் 2000!

கர்நாடக தேர்தல்
களத்தில் ₹ 2000 
கைமாறினால்
கரை சேருவோமென
கொட்டி இறைத்து..,
பெட்டி காலியானதே
ஆட்சியும் பறிபோனதே...
₹ 2 ஆயிரத்தால் வாக்கை
வாங்க முடியவில்லை
என்றால்...
நாட்டில் ₹ 2 ஆயிரத்தின்
நடமாட்டம் எதற்கு.?
நம் மதிப்பே
போனபிறகு பணத்திற்கு
மதிப்பெதற்கு..?!
செய்தாரே மறுபடியும்
தில்லாலங்கடி வேலை..!

வாலாஜா ஜெ.அசேன் Ex MLA





Thursday, 11 May 2023

இதுதான் இன்றைய வாலாஜாப்பேட்டை..!

வாலாஜாவில் 
துப்பாக்கிகளின் துரைத்தனம்..!

துப்பாக்கி 1

தூண்டில் போட்டால்தான்
மீன் கிடைக்கும்...
துப்பாக்கிக் காட்டினாலும்
மீன் கிடைக்கணும்..!
மீறினால்...
'துப்பாக்கி'க்குத்
துணைபோகும் நகராட்சியின்
நோட்டீஸ் கிடைக்கும்..!

ஏழை மீன் வியாபாரிகள்
துப்பாக்கிகளின் துரைத்தனத்தால்
படும் துயரம்
சொல்லி மாளாது...!

படிப்பது இராமாயணம்
இடிப்பதோ பெருமாள் கோயில்
என்பார்கள்..!

உதடுகள் உச்சரிக்கும்.. ராம நாமம்.,
ஆனால்., ராமர் கோயில் 
குளத்தை அபகரித்து
மாடிவீடு கட்டிக் கொள்ளும்
'துப்பாக்கி' மோகனம்..!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற‌,
அரசு சொல்லும்... 
ஆனால்...
ஆணையாளர்களே
வர அஞ்சும்
வாலாஜா நகராட்சிக்கு
கமிஷன் பணம் 
கணக்கெடுத்து 
பங்கு போடவே நேரமில்லை..!
இதில் ஆக்கிரமிப்பாவது
மண்ணாங்கட்டியாவது..!

அறிவிக்கப்பட்டது
பேருந்து நிலைய விஸ்தரிப்பு...
மதிப்பீடு ரூ.இரண்டு கோடியே எட்டு இலட்சம் (₹208 இலட்சங்கள்)
கட்டப்படுவதோ...
10×10 பதினெட்டு
கடைகள் மட்டுமே..!
பேருந்து நிலைய விஸ்தரிப்பா
அல்லது கடைகள் விஸ்தரிப்பா
புரியவில்லை...?
மொத்தத்தில் ஆளாளின்
விஸ்தரிப்புக்கு  ரூ.91,000/=..!
(அதானிக்குக் கிடைத்த 
இருபதாயிரம்
கோடிகளைப் போல...)

பகல் கொள்ளையா?
பஸ் ஸ்டாண்டு, கொள்ளையா?
மயானக் கொல்லையில்
மரணப் படுக்கை
விரியும் வேளையில்
மண் உண்ணும் உன் உடலை
கமிஷன் பணம் காக்குமா..?

துப்பாக்கி 2

துப்பாக்கி போலீஸ்
துணையுடன்
புளூமெட்டலின்
புல்லட் கிளப்பும் புழுதியில்
கஞ்சா, காட்டன்,
வயிற்றில் மருந்தெடுக்கும்
மசாலா வைத்தியர்கள்,
கட்டப் பஞ்சாயத்து,
கல் குவாரிகள் என
எல்லாம் கதிகலங்கும்...
கட்டாய வசூல் வேட்டை..!
இதுதான் இன்றைய 
வாலாஜாப்பேட்டை..!

விரைவில்...
மாலைநேர மக்கள் சந்திப்பு..!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA.,



கர்நாடகத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை!

கர்நாடகத்தில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை!
வெடிக்கும் நாள் மே 10!
           
ஆசாடபூதிகளிடத்தில் அதிகார‌ம்
அர்த்தமற்ற சட்டங்களால்
மக்கள்படும் துயரம்..!

எட்டாண்டுகள் எள்ளளவு
வளர்ச்சியில்லாமல்
கண்டதற்கெல்லாம்
வரி வரியென வாரிச் சுருட்டி
நெறிகெட்ட முதலாளி
வர்க்கத்தை வளர்த்து
கூடாநட்பு கேடாய் முடிந்ததால்...

நரேந்திரர் 
கர்நாடக வீதியில்
தப்பட்டையடித்து 
அலையும் அவலக் காட்சி..!

பிரதமர்களால் பாரதம்
பெருமையும், பொலிவும் 
பெற்றது அந்தக் காலம்..!
நரேந்திரரின்  "நா" நடத்தும்
பொய் நர்த்தனத்தால்
நாடு தலைகுனிந்தது இந்தக்காலம்‌..!

அன்று...
பொய்களின் பிதாமகன் *ஹிட்லர்*
இன்றோ...
பொய்களின் தலைமகன் *சாய்வாலா பட்லர்*..!

இந்த லட்சணத்தில்...
மன்கிபாத்திற்கு நூறுநாள் வெற்றிவிழா..!
திரைப்படங்களே நூறுநாள் ஓடுவதில்லை...
ஓட்டுவார்கள்..!
ஓடாத மன்கிபாத்தை ஓட்டி
விளம்பரவிழா..!

2014ல்...
மத உணர்வுகளின் 
மயக்கம் தந்த வெற்றி..!

2019ல்...
மண்ணைக் காக்கும் மாவீரர்கள் 
புல்வாமா மண்ணில்
மரணித்த தியாகத்தால்
தக்கவைத்த வெற்றி..!

2024ல்...
எந்த முயற்சியாலும் முடியவே
முடியாது..!

காரணம்...
2023ல் 
கர்நாடக மக்கள் 
வருங்கால பாரதத்தை புனரமைக்க
கங்கணம் கட்டிக் கொண்டார்கள்..!

மனக் கொதிப்பு சூறாவளியாக சுழன்று...
எரிமலையாய்க் குமுறிக் கொண்டுள்ள மக்களின் மன்கிபாத் வெடிக்கும் நாள்தான் மே10..!

அந்த நாள் மறுக்கப்பட்ட
செங்கோட்டையின் ராஜபாட்டையில் 
மங்காப் புகழ் கொண்ட
நேரு பரம்பரையின் தங்கத் தவப் புதல்வன்...
இராகுல் காந்தியின் வெற்றிப் பயணத்துக்கு முன் அனுமதி பட்டயம் வழங்கும் பொன் நாள்..!

அந்நாள் இனிய நாள்..!
கர்நாடகத் தாயைப் போற்றுவோம்..!

வாலாஜா ஜெ.அசேன், Ex. MLA.,