ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானிக்கும் மோடிக்கும் இடையிலான கள்ள உறவு மற்றும் நிதி மோசடி குறித்து கேள்வி எழுப்பிய இராகுல் காந்தியைப் பழிவாங்கும் பாஜக அரசைக் கண்டித்து, இராகுல் காந்தி பாசறையைச் சேர்ந்த காங்கிரசார், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை 05.04.2023 அன்று காலை 11.00 மணி அளவில் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜா ஜெ.அசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு மாநில துணைத் தலைவர் கோடீஸ்வரன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் நியாஸ், சசிகுமார், இராணிப்பேட்டை நகர மன்ற உறுப்பினர் முருகன், வாலாஜா நகர காங்கிரஸ் தலைவர் பூக்கடை மணி, காங்கிரஸ் மனித உரிமைகள் பிரிவு இராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் ஜானகிராமன், இராணிப்பேட்டை நகர காங்கிரஸ் தலைவர் உத்தமன் உள்ளிட்ட 25 பெண்கள் உட்பட சுமார் 130 பேர் தமிழ்நாடு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment