தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில், பாஜக ஆட்சி செய்த குஜராத் மற்றும் இமாச்சல் ஆகிய இரு மாநிலங்கள் மற்றும் ராஜஸ்தான், சத்தீஷ்கர், ஒரிசா, பீகார் ஆகியவற்றில் தலா ஒரு சட்டமன்றத் தொகுதிவீதமும், உத்திிரபிரதேசத்தில் இரண்டு சட்டசபை ஒரு பாராளுமன்றத் தொகுதிக்குமான இடைத்தேர்தலாகும். இவற்றில் உபி. மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றது. கதாலி சட்டமன்றத் தொகுதியிலும் தோல்வியேதான். ராம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வென்றது.
ராஜஸ்தான் சர்தார் சாகர் தொகுதி, சத்தீஷ்கரில் பானுபிரதாப்பூர் தொகுதி, ஒரிசாவில் பதம்பூர் தொகுதி, பீகாரில் குர்ஹானி தொகுதி ஆகியவற்றில் பாஜக தோல்வியைத் தழுவியது.
மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் மட்டும் வெற்றிபெற்று, பாஜக ஆட்சி செய்து கொண்டிருந்த இமாச்சலத்தில் தோல்வியைக் கண்டது.
ஆக, கட்சித்தலைவரான நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சலத்தில் தோல்வி. ஆட்சித் தலைவரான குஜராத் மாநிலத்தில் வெற்றி.
பாஜகவின் இடுப்புத்துணி அவிழ்ந்து கிடக்கிறது. அதைப்பற்றி எந்த ஊடகங்களும் விமர்சிக்காமல் சொக்கா வெளுத்து வெண்மையாக இருக்கிறதென்று கூப்பாடுபோட்டு செஞ்சோற்றுக் கடனை தீர்க்கின்றன.
தோல்வியையும் வெற்றியாகக் கொண்டாடிய கைப்புள்ள வடிவேலுவைப் போல் பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.
ஆக, நடந்து முடிந்த, தற்போதைய இந்தத் தேர்தலின் முடிவுகளானது, இனி 2024-ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் மோடி ஆட்சியின் முடிவுரைக்கான முன்னுரையாக இருக்குமென தெள்ளத் தெளிவாக புரிய வைக்கின்றது.
வாலாஜா ஜெ.அசேன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்