Thursday, 11 May 2023

இதுதான் இன்றைய வாலாஜாப்பேட்டை..!

வாலாஜாவில் 
துப்பாக்கிகளின் துரைத்தனம்..!

துப்பாக்கி 1

தூண்டில் போட்டால்தான்
மீன் கிடைக்கும்...
துப்பாக்கிக் காட்டினாலும்
மீன் கிடைக்கணும்..!
மீறினால்...
'துப்பாக்கி'க்குத்
துணைபோகும் நகராட்சியின்
நோட்டீஸ் கிடைக்கும்..!

ஏழை மீன் வியாபாரிகள்
துப்பாக்கிகளின் துரைத்தனத்தால்
படும் துயரம்
சொல்லி மாளாது...!

படிப்பது இராமாயணம்
இடிப்பதோ பெருமாள் கோயில்
என்பார்கள்..!

உதடுகள் உச்சரிக்கும்.. ராம நாமம்.,
ஆனால்., ராமர் கோயில் 
குளத்தை அபகரித்து
மாடிவீடு கட்டிக் கொள்ளும்
'துப்பாக்கி' மோகனம்..!

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்ற‌,
அரசு சொல்லும்... 
ஆனால்...
ஆணையாளர்களே
வர அஞ்சும்
வாலாஜா நகராட்சிக்கு
கமிஷன் பணம் 
கணக்கெடுத்து 
பங்கு போடவே நேரமில்லை..!
இதில் ஆக்கிரமிப்பாவது
மண்ணாங்கட்டியாவது..!

அறிவிக்கப்பட்டது
பேருந்து நிலைய விஸ்தரிப்பு...
மதிப்பீடு ரூ.இரண்டு கோடியே எட்டு இலட்சம் (₹208 இலட்சங்கள்)
கட்டப்படுவதோ...
10×10 பதினெட்டு
கடைகள் மட்டுமே..!
பேருந்து நிலைய விஸ்தரிப்பா
அல்லது கடைகள் விஸ்தரிப்பா
புரியவில்லை...?
மொத்தத்தில் ஆளாளின்
விஸ்தரிப்புக்கு  ரூ.91,000/=..!
(அதானிக்குக் கிடைத்த 
இருபதாயிரம்
கோடிகளைப் போல...)

பகல் கொள்ளையா?
பஸ் ஸ்டாண்டு, கொள்ளையா?
மயானக் கொல்லையில்
மரணப் படுக்கை
விரியும் வேளையில்
மண் உண்ணும் உன் உடலை
கமிஷன் பணம் காக்குமா..?

துப்பாக்கி 2

துப்பாக்கி போலீஸ்
துணையுடன்
புளூமெட்டலின்
புல்லட் கிளப்பும் புழுதியில்
கஞ்சா, காட்டன்,
வயிற்றில் மருந்தெடுக்கும்
மசாலா வைத்தியர்கள்,
கட்டப் பஞ்சாயத்து,
கல் குவாரிகள் என
எல்லாம் கதிகலங்கும்...
கட்டாய வசூல் வேட்டை..!
இதுதான் இன்றைய 
வாலாஜாப்பேட்டை..!

விரைவில்...
மாலைநேர மக்கள் சந்திப்பு..!

வாலாஜா ஜெ.அசேன் Ex.MLA.,



No comments:

Post a Comment