மலையின் மரண யாத்திரை!
மலையே... மலையே... மா மலையே!
மக்கள் மனம் கவர்ந்த அனந்தர் மலையே!
மரணத்தின் மடியில் உன் வாழ்வு அலையே!
மனம் கலங்கி பாடுகிறேன் இறுதி அஞ்சலியே!
மாண்டுபோன கோடானு கோடி
மாந்தர்தம் விழித்திரையில் படர்ந்தது
உன் எழில் பிம்பமே-இனி
மலரும் ஜனன விழிகள் காணப் போவது
மாயமான மலையின் வெற்றிடமே!
கல்லைக் காசாக்கும் கயவர்கள் - உன்னை
ஜல்லடையில் ஜலித்து விட்டனரே!
சொல்லால் சுட்டும் பயனில்லை!
அதிகாரிகளோ...
ஏகாந்த நித்திரையில்!
எடக்குப்பம் மலையோ
மரண யாத்திரையில்!-
எனவே-
வல்லானிடம் கை ஏந்துகிறேன்!
நயவஞ்சகர்களின்
நெஞ்சில் வைப்பான்
நெருப்பையே!
வாலாஜா ஜெ.அசேன், MA, BL., Ex.MLA.
No comments:
Post a Comment