Tuesday, 13 October 2026

பார் சிறுத்ததால் படை பெருத்ததோ! படைபெறுத்ததால் பார் சிறுத்ததோ!

"பார் சிறுத்ததால் படை பெருத்ததோ..!
படைபெறுத்ததால் பார் சிறுத்ததோ.!!


ராகுல்ஜியின் படை பெருத்ததால்
டெல்லி சிறுத்துப்போனது.!
கலிங்கத்துப் பரணியின்
காவியக் காட்சி கண்முன்னே
நிகழ்ந்தது..!

அரசியல் மேதை
பாபாசாகிப் அம்பேத்கர்
உருவாக்கிய அரசியல் சட்டம்
கபடவேடதாரிகளால்
உருக்குலைக்கும் முயற்சி.,
ஜனநாயகம் பணநாயகத்தின்
முன்னே மண்டியிடும்
அவலக்காட்சி.!
கால்நூற்றாண்டு பித்தலாட்ட
அரசியலின் பிதாமகனின்
காட்டாட்சியில் சுயமிழந்து
கானகமானது தேசம்..!

எதிர்த்துப் போராடியவர்களுக்கு
திறக்கப்படும் சிறைக் கதவுகள்.!
மாநிலக் கூட்டாட்சியின் மாண்போ
மரணப்படுக்கையில்.!
புனித பூமியாகக் போற்றப்பட்ட தேசம்,
சர்வாதிகாரியின் சூழ்ச்சியால்
வீழ்ச்சியின் விளிம்பில்..!

அடால்ஃப் ஹிட்லரையும்,
பெனிட்டோ முசோலினியையும்
பள்ளிப் பாடத்தில் கண்டோம்.!
அவர்களின் நவீன அவதாரத்தை,
துரதிர்ஷ்டவசமாக நம் தலைமுறையில்
காண்கிறோம்..!
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
என்பது ஏட்டளவில் நின்றது.!
கபட சர்வாதிகாரியின் சிந்தனைகளோ
அரசியல் சட்டமாகிப் போனது.!

ஜனநாயகத்தின் ஆணிவேரை
ஆட்டிப்பார்க்க, நடந்தேறிய
விபரீத விளையாட்டை எதிர்த்து,
நீதிக்காக மக்கள் உரிமையை
பாதுகாக்க தலைவர் ராகுல்ஜி
பொங்கியெழுந்தார்,
போர்க்குரல் கொடுத்தார்.!
திரண்டது இளைஞர் படை .!

டெல்லி பிரதேசமே
திக்குமுக்காடிப் போனது.!
அயல்நாட்டு ஊடகங்கள்
வியந்து வெளிச்சம் போட்டன.!
உள்நாட்டு ஊடகங்களோ,
கபோதிகளானது.!

ராகுல்ஜி,
மக்கள் அலைகடலில்,
தொண்டர்களோடு தொண்டனாக
மதகஜ நடைபோட்ட காட்சியின்
மாட்சியைக்காண இருகண்கள் போதாது.!
காவல்துறை கதிகலங்கி நின்றது.!
இளைஞர்களின் உணர்ச்சி வெள்ளத்தில்
ஆதவனும் அடங்கிப்போனான்.!

தன்னுயிரைத் துச்சமென மதித்து
அஞ்சாநெஞ்சனாக களமாடும்
அவரை நினைக்கையில்.,

"அச்சம் என்பது மடமையடா,
அஞ்சாமை ராகுல் உடமையடா
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு,
ஜனநாயகம் காப்பது  கடமையடா"

இப்போது பட்டுக்கோட்டையார்
இருந்திருந்தால் இப்படித்தான்
பாடியிருப்பார் போலும்..!

தேசவிரும்பிகளே
தினவெடுத்த தோளை உயர்த்துங்கள்.!
உரிமையிழந்து ஊழியம் செய்து
வாழ்வதைவிட,
உயிரைக்கொடுத்து,
உரிமையை மீட்க
லட்சியத் தலைவன் ராகுல்ஜி வழியில்
போராடுவோம் வா..!

வாலாஜா ஜெ.அசேன்
Ex MLA

No comments:

Post a Comment