அனந்தலை ஊராட்சி:
படம் 1: வாலாஜா-அம்மூர் சாலை, ஆனந்தலை ஊராட்சியில் சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்விளக்கு.
படம் 2: படம் 1 ல் காட்டப்பட்டுள்ள மின்விளக்கு அமைக்க ஆன செலவு ரூ 5.7 லட்சம்.
இது போல அனந்தலை ஊராட்சியில் மொத்தம் 6 சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மொத்த செலவு 34.20 லட்சம்.
வாலாஜா நகரம்:
படம் 3: வாலாஜா பதிவு அலுவலகம் எதிரில் உள்ள மின்சாரத்தால் இயங்கும் மின் விளக்குக் கோபுரம்
மரம் 4: படம் 3 ல் காட்டப்பட்டுள்ள மின்விளக்கு அமைக்க ஆன செலவு ரூ.2.75 லட்சம்.
வாலாஜா பதிவு அலுவலகம் எதிரில் 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின் விளக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடியது. அனந்தலை ஊராட்சியில் 2020 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மின்விளக்கு சூரிய ஒளியில் இயங்கக்கூடியது. இதன் உயரம் பதிவு அலுவலகம் எதிரில் உள்ள மின் கம்பத்துடன் ஒப்பிட்டால் பாதி உயரம் கூட கிடையாது. மின்சாரத்தைச் சேமித்து வைக்கும் பேனலுடன் கூடிய பேட்டரி அமைப்பு மட்டுமே சூரிய ஒளி மின் விளக்குகளில் கூடுதலாக இருக்கக் கூடியது.
மேற்கண்ட விவரங்களைப் பரிசீலிக்கும் பொழுது "மூனு மொழம் பத்து ரூபாய்; ஒரு முழம் முப்பது ரூபா!" கதையா இருக்கு. அனந்தலை ஊராட்சியில் சூரிய ஒளி மின் விளக்குகள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாலாஜா மக்களின் கோரிக்கையாகும்.
வெட்டாத கிணற்றிலும் கட்டாதப் பாலத்திலும் காசு பார்க்கும் காலமிது. இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால் பஞ்சாயத்துச் செயலாளர்களே முடிசூடா சுல்தான்களாக வலம் வருகின்றனர். பல்வேறு உள்ளாட்சித் திட்டங்கள் இவர்கள் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
மின்விளக்கு போன்ற திட்டங்களால் அனந்தலை உள்ளிட்ட ஊர்களில் இருள் அகல்கிறதோ இல்லையோ பஞ்சாயத்துச் செயலாளர்களின் இல்லங்களில் வெளிச்சம் பாய்கிறது.
நீதிக்கான குரல்
No comments:
Post a Comment